கொழும்பிலுள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு


கொழும்பிலுள்ள அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இன்று  பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சிறைச்சாலை வைத்தியசாலைகளில் இவை முன்னெடுக்கப்படவுள்ளன.

கொழும்பு மெகசின், விளக்கமறியல் சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை தலைமையகத்தின் அதிகாரிகளுக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க கூறியுள்ளார்.

No comments: