பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்பிலான முக்கிய செய்தி


தற்போது நாட்டில் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றானது சமூகத்திற்கு பரவவில்லை என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் அனைவரும் மினுவங்காடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் மாத்திரமே என தேசிய தொற்று நோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய சூழ்நிலையில் எந்தவொரு நபருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளை தனியார் வைத்தியசாலைகளில் செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: