இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியாவில் தங்கியிருந்த 371 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பணிக்கு சென்றிருந்த 362 பேரும்,இந்தியாவிலிருந்து 9 இலங்கையர்களும் இன்று  நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: