நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பற்றிய விபரம்


நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 10 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளங்காணப்பட்டதுடன்,ஏனைய 120 பேரும் அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மினுவாங்கொடை கொத்தணியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1721 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம் கட்டார் மற்றும் குவைட் ஆகிய நாடுகளில் இருந்து நாடு திரும்பி தனிரமப்படுத்தப்பட்டிருந்த தலா ஒவ்வொருவருக்கும் நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நேற்றைய தினம் 132 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5170 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை,கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைநதவர்களின் எண்ணிக்கை 3357 ஆக காணப்படுகிறது.

மேலும் 1800 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.


No comments: