பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தல்


நாட்டில் தற்பொழுது நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பின் அடிப்படையில் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்ட போதிலும் உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குப் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தடையாக அமையாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பரீட்சை நிறைவடையும் வரை சுகாதார பாதுகாப்பை உறுதி செய்து மாணவர்களுக்கு ஆகக்கூடிய ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத திணைக்களம் போக்குவரத்து நடவடிக்கைகளைத் தடையின்றி நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பட்டிருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

No comments: