இரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு


இரயில்களில் ஆசனங்களை முன்பதிவு செய்துள்ள பொதுமக்களுக்கான சலுகைத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணச்சீட்டுகளின் பெறுமதிக்கு உரிய பணத்தை பொதுமக்கள் மீளப் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாற்றுத் திகதியொன்றை ஒதுக்கிக் கொள்வதற்கு  பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா அச்ச நிலைமை காரணமாக ரயில்வே திணைக்களத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்சேவைகளுக்கு மாத்திரமே இந்த சலுகை வழங்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பயணச் சீட்டுகளுக்கு உரிய தொகையினை பெற்றுகொள்ள விரும்புவோர், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் அதனை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் ரயில் சேவைகள் வழமையான முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: