புதிய சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் அசேல குணவர்தன நியமனம்


புதிய சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் அசேல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, உடன் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வைத்தியர் அசேல குணவர்தன, களுபோவில போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதற்கு முன்னர் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகமாக, விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: