ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்ய நடவடிக்கை


நாட்டில் கொரோனா தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இவ்வாறு கைது செய்யப்படுவோருக்கு எதிராக, தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவிக்க்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட மற்றும் திவுலுப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளுக்கு கொரோனா தொற்றுக் குறித்த ஊரடங்கு சட்டம் அமுபடுத்தப்பட்டுள்ளது.

திவுலபிடிய பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையில் குறித்த பகுதிகளில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: