சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு


புதிதாக 1117 வைத்தியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

புதிய வைத்தியர்களுக்கான பெயர்ப் பட்டியல் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டுள்ளவர்கள் எதிர்வரும் 20ம் திகதி தொடக்கம் கடமைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: