பாமசி ஒன்றில் மருந்து வகைகளை களவாடிய சந்தேக நபர் தலைமறைவு - சீ.சீ.டிவி. காணொளியோடு பொலிஸார் வலைவீச்சு

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் நகரில் உள்ள பாமசி ஒன்றில் 1800 ரூபா பெறுமதியான இரண்டு மருந்து பெட்டிகளை களவாடிய சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இந்த சம்பவம் 23.10.2020.வெள்ளிக்கிழமை மாலை வேளையில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

குறித்த பாமசிக்கு மருந்தினை கொள்வனவு செய்ய வருகை தந்த நபரே  மருந்து பெட்டியினை களவாடி சென்றமை தொடர்பில்  பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இதேவேளை குறித்த பாமசியில் பொருத்தபட்டுள்ள சீ. சீ. டிவி கேமராவினை கொண்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை  ஹட்டன் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments: