நகையகத்திற்குள் புகுந்து நகையினை கொள்ளையிட்ட பெண் கைது

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ் 


தலவாக்கலை நகரில் அமைந்துள்ள நகையகமொன்றில் பஞ்சாயுதம் வடிவினை கொண்ட தங்க ஆபரணத்தை கொள்ளையிட்ட பெண் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் 13.10.2020 செவ்வாய்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. 

தங்க நகையினை கொள்வணவு செய்ய வந்த குறித்த பெண்ணுக்கு நகையக ஊழியர்கள் பலநகைகளை காண்பித்துள்ளனர். அதனை பார்வையிட்ட பெண் எனக்கு எதுவும் பிடிக்கவில்லை என கூறி நகையகத்தில் இருந்து வெளியேற முயற்சித்த போது நகையக ஊழியர்கள் குறித்த பெண்ணுக்கு காண்பித்த பஞ்சாயுதகங்களின் எண்ணிக்கையை மீள் கணக்கிட்டுள்ளனர். இதன் போது ஒரு பஞ்சாயுதம் குறைவாக கானப்பட்ட போது அதனை நீங்கள் எடுத்தீர்களா என நகையக உழியர்கள் வினவியுள்ளனர். 

இதற்கு பதிலளித்த பெண் தான் எடுக்கவில்லை என கூறியுள்ளார். இந் நிலையில் பொலிஸாருக்கு கூற போவதாக கூறியவுடன் தன்வசமிருந்த பஞ்சாயுத்தை எடுத்து ஊழியரிடம் கொடுத்துள்ளார். 

பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் தொடர்பில் முறைபாடு செய்யப்பட்டமைக்கு இணங்க குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: