தீப்பரவலில் விற்பனை நிலையமொன்று முழுவதுமாக தீக்கிரையாகியுள்ளது


கொழும்பு - ஹட்டன் வீதியின் யட்டியாந்தோட்டை மீகஹவெல்ல பிரதேசத்தில்  நேற்றிரவு 8.45 மணியளவில் ஏற்பட்ட தீப்பரவலில் விற்பனை நிலையமொன்று முழுவதுமாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவிசாவளை மற்றும் மாவனெல்லை தீயணைப்பு பிரிவினர் மற்றும் பெரகலை இராணுவ முகாம் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இணைந்து தீயினை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,தீப்பரவலுக்கான காரணத்தை கண்டறிவதற்காக இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யட்டியாந்தோட்டை பொலிஸார் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: