தலவாக்கலை நகரசபைத்தலைவர் இடைநிறுத்தம்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


தலவாக்கலை - லிந்துல நகரசபைத் தலைவர் அஷோகசேபால தலைவர் பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், புதிதாக பாரதிதாஸன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மத்தியமாகாண ஆளுநர் லலித் யூ கமகே மேற்படி உத்தரவை இன்று (28/10) விடுத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நகரசபை உறுப்பினர் ஒருவரினால் அஷோக சேபால மீது முன்வைக்கப்பட்டுள்ள எட்டு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணையை முன்னெடுக்கும் வகையிலேயே தற்காலிகமாக தலைவர் பதவிலிருந்து அஷோக சேபால இடைநிறுத்தப்பட்டுள்ளார். 

அரசியல் பலிவாங்களே  என் மீதான குற்றசாட்டுக்கு காரணம் என தனது பதவி விலகள் தொடர்பில்   அஷோக சேபால ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 


No comments: