பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி இன்றைய தினத்தில் இருந்து தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றம்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 



நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 தொற்று காரனமாக இன்றைய தினத்தில் இருந்து பத்தனை தேசிய ஸ்ரீபாத கல்வியற்கல்லூரி சுய தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டு இராணுவத்தினர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று கொண்டனர். 

இந்த நடவடிக்கை 11.10.2020.ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. 

பத்தனை தேசிய ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் மாத்திரம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் 500 பேர் தனிமைபடுத்த முடியுமென இராணுவத்தினர் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை கல்லூரியில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த, துார பிரேதேசங்களை சேர்ந்த 250 மாணவர்கள் இரானுவத்தினரின் பலத்த பாதுகாப்போடு அவர்களின் சொந்த இடங்களுக்கு பேருந்துகளின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டதோடு, அருகாமையில் உள்ள மாணவர்கள்,அவர்களின்  பெற்றோர்கள் கல்லூரிகளுக்கு வருகை தந்து தனியார் வாகனங்களின் ஊடாக அழைத்து செல்லபட்டனர். 

கல்லூரியின் விடுதிகளில் வசித்து வருகின்ற விரிவுரையாளர்களை குறித்த விடுதியில் இருந்து வெளியேறுமாறு இராணுவத்தினரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








No comments: