ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழு கூட்டம்  இன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20வது  திருத்தம்  எதிர்வரும் 21ம் திகதி  நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் நாடாளுமன்ற குழு இன்று கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பின் 20வது திருத்தம் தொடர்பான விவாதம் எதிர்வரும்  21 மற்றும் 22ம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த தினங்களில் காலை 10 மணி முதல் இரவு 7.30 மணிவரை 20வது திருத்தம் குறித்த விவாதம் நடைபெறவுள்ளதாக  நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: