ராம் கராத்தே சங்கத்தின் பயிற்சி பட்டறையும் தரப்படுத்தலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

 வி.சுகிர்தகுமார் 


பாடசாலைகளில் உள்ள கராத்தே மாணவர்கள் மூலம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல வெற்றிகளை பெற்று சாதனை படைத்துவரும் ராம் கராத்தே சங்கத்தின் பயிற்சி பட்டறையும் தரப்படுத்தலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மகாவித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று (03) நடைபெற்றது.

ராம் கராத்தே சங்கத்தின் சிரேஸ்ட போதானாசிரியரும், ஆலோசகரும், கிழக்கு மாகாண ராம் கராத்தே சங்கத்தின் தலைவரும், அரசினால் வழங்கப்படும் தற்காப்பு கலைக்கான கலாபூசண விருது பெற்றவருமான சிகான் கே.கேந்திரமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற பயிற்சிப்பட்டறையில் சிரேஸ்ட ஆசிரியர்கள் கனிஸ்ட கறுப்பு பட்டி வீரர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் ஜப்பான் கராட்டி மரியோசிக்காய் சங்கத்தின் பிரதம போதனாசிரியரும் தலைவரும் மறைந்த மாமனிதருமாகிய சிகான்; கே.இராமச்சந்திரனை நினைவு கூர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் மாவட்ட மாகாண தேசிய கராத்தே சுற்றுப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் தேசிய சாதனைகள் படைத்துவரும் பிபி.சரோன் சச்சின், எம்.எஸ்.மொகமட் பைனாஸ் ஆகிய வீரர்களின் கராத்தே கண்காட்சியும் இடம்பெற்றது.

இதேநேரம் கராத்தே மாணவர்களின் பெற்றோர்களும் தமது கருத்துக்களை இங்கு பதிவு செய்ததுடன் கராத்தே மூலம் தமது பிள்ளைகள் ஒழுக்கத்தை கற்றுக்கொள்கின்றனர் எனவும் குறிப்பிட்டனர்.

நிகழ்வில் ஜக்கிய ராம் கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியர் ராம் கராத்தே சங்கத்தின் செயலாளர் சென்சி எம்.பி.செயினுலாப்தீன் உள்ளிட்ட கறுப்பு பட்டி வீரர்கள் பலர் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர். 


No comments: