நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்-ஐக்கிய மக்கள் சக்தி


நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக   அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் வர்த்தக நிலையங்களில் அவ்வாறான விலைகளில் பொருட்கள் கிடையாது என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நடைமுறைக்கு ஏற்றவகையிலான தீர்வு திட்டங்களை முன்வைக்குமாறு கோருகின்றோம்.

பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டமைக்கான  பொறுப்பினை தற்போதைய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்   ஏனென்றால் கொரோனாவுக்கு முன்னரான காலப்பகுதியிலேயே என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: