உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு


களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை மற்றும் பாலிந்த நுவர பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி அகலவத்தை பிரதேச செயலகத்திற்குட்பட்ட  ஹொரன்கொட, பேரகம, தெபிலிகொட, கெக்குளுந்தர வடக்கு ஆகிய பகுதிகள் மற்றும்  பாலிந்த நுவர பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெல்லன ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த பகுதிகளுக்குள் உட்பிரவேசித்தல் மற்றும் வெளியேறுதல் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments: