ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் அச்ச நிலைமை காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் ரயில் சேவைகளைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்கள பிரதம பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்

அத்துடன், ரயில்களில் பயணம் செய்யும்போது, சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையைக் கருத்திற்கொண்டு நகரங்களுக்கிடையிலான ரயில்சேவைகள் நேற்றைய தினம் முதல் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: