உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குத் தான் உட்பட ஐ.தே.கட்சியின் தலைமையிலான அரசாங்கம் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும் - ஹேமசிரி பெர்னாண்டோ


உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குத் தான் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான அரசாங்கம் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணையத்தில் முன்னிலையாகி சாட்சியமளிக் கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்திருந்ததாகவும் ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது அதற்கொரு கருப்பு புள்ளியாக அமைந்துவிட்டதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அப்போதைய ஜனாதிபதியும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் கண்மூடித்தனமான செயற்பாடுகளே இந்த தாக்குதல் சம்பவத்திற்குக் காரணமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், தேசிய தௌஹீத் ஜமாத்தின் தற்கொலை குண்டுதாரிகள் எத்தனை பேர் தாக்குதல்களை மேற்கொள்ளப் போகின்றார்கள் என்பது தொடர்பாகவும் அதன் தலைவர் சஹரான் ஹாஷிம் தொடர்பாகவும் கடந்த 2019 ஏப்ரல் 4ஆம் திகதி, வெளிநாட்டு உளவுத்துறைக்குத் தகவல்கள் கிடைக்கும் வரை தங்களுக்கும் எந்ததொரு தகவலும் கிடைக்கவில்லை.

மேலும், இத்தகையதொரு தாக்குதலை நடத்துவதற்குப் பல வருடங்கள் திட்டமிடப்பட்டே முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இது ஒரு திடீர் சம்பவம் அல்ல.

மாநில புலனாய்வு சேவையால் தயாரிக்கப்பட்ட பல்வேறு புலனாய்வு அறிக்கைகள், சஹரான் மற்றும் அவரது ஆதர வாளர்களால் தேசியப் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என அவர் மேலும் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: