ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான தகவல்


நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தும் திட்டம் எதுவுமில்லை என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

தற்போது ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள பகுதிகளை தவிர வேறு பகுதிகளில் ஊரடங்கினை அறிவிக்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு சட்டம் குறித்து சமூகத்தில் பல வதந்திகள் காணப்படுகின்ற போதிலும் நாடளாவியரீதியில் ஊரடங்கினை அறிவிக்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை கொவிட் செயலணியின் கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவதை அடிப்படையாக வைத்தே ஊரடங்கு சட்டம் குறித்து தீர்மானிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது 44 பொலிஸ்பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளது அதனை கடுமையாக நடைமுறைப்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: