கடற்கரை பகுதியில் நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞர்களை தேடும் பணி தொடர்கின்றது.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்கல்பாகந்த தோட்டத்தை சேர்ந்த 22 வயதுடைய முத்துகுமார் சிந்துஜன், 23 வயதுடைய மனோகரன் சசிகுமார் மற்றும் பதுளையை சேர்ந்த பி.பிரதீபன் ஆகிய மூன்று இளைஞர்களே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில் நீர்கொழும்பு பகுதியிலுள்ள காபட் தயாரிப்பு நிறுவனமொன்றில் வேலை செய்யும் மேற்படி இளைஞர்கள் சக நண்பனான பிரசாத்தாசனின் பிறந்த தினத்தை கொண்டாட 03/10 மாலை 03.30 மணியளவில் கொச்சிக்கடை கம்மல்தொட்ட கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனர்.
அங்கு சென்ற இளைஞர்கள் நீரில் விளையாடிக்கொண்டிருந்தபோது தலவாகலையை சேர்ந்த முத்துகுமார் சிந்தூஜன் கடல் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் நான்கு இளைஞர்கள் கடலில் பாய்ந்து காப்பாற்ற முற்பட்டுள்ளனர். இந்த நால்வரில் ஒருவரை பொலிஸார் உயிருடன் மீட்டுள்ளதுடன் ஏனைய மூவரை தொடர்ந்து தேடும் பணி இடம்பெற்று வருகின்றது.
No comments: