நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று


நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் வாரத்திற்குள் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுத்து செல்வது தொடர்பாக நாடாளுமன்ற குழுவின் விசேட கலந்துரையாடல் இன்று  இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் கட்சி தலைவர்களுக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதற்கமைய அடுத்த வாரத்தில் நான்கு நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பதா? இல்லையா? என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆராய்ந்து தீர்மானிக்கப்படவுள்ளது.

No comments: