சில அத்தியாவசிய பொருட்களுக்கு விலை குறைப்பு


வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில அத்தியாவசிய பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய  பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி வரி இன்று நள்ளிரவில் இருந்து தளர்த்தபடவுள்ளது. 

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் டின்மீன் (பெரியது) ரூ. 200/- க்கும், ஒரு கிலோ பெரிய  வெங்காயம் ரூ. 100/- க்கும், ஒரு கிலோ சீனி ரூ.85/- க்கும் ,பருப்பு ஒரு கிலோ கிராம் 150 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சதொச விற்பனை நிலையங்களில் தேங்காயை சாதாரண விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: