ஊரடங்கு உத்தரவு தொடர்பில் இராணுவத் தளபதி தெரிவித்துள்ள விடயம்


மேல் மாகாணம் முழுவதும் நாளை வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நவம்பர் 2ம் திகதி திங்கட்கிழமை அதிகாலை  5 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பயணிக்க முடியும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் என்பன திறக்கப்பட்டிருக் கும் என சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதேநேரம், கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங் களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ள இடங்களில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற் குத் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வாய்ப்பளிக்கப்படும்.

அத்துடன், கொழும்பு மற்றும் குருணாகலை மாவட்டங் களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப் பட்டுள்ள இடங்களில், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதிக்கப்படும்.

கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட பின்னர் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவுப் பொதி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் நாளை 29 ஆம் திகதி காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை வீட்டில் இருந்து கடைகளுக்கு நடந்து சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments: