பெருந்தோட்டத்துறை மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு பிரச்சினைகள் - அனுஷா சந்திரசேகரன்


பெருந்தோட்டத்துறை மாணவர்கள் க.பொ.த சாதரணதரம் மற்றும் உயர்தர கல்வியில் உரிய தரத்துடன் சித்தியடைவதற்கு பிரசவ வேதனையை விட பன்மடங்கு தடைகளை தாண்டவேண்டிய நிலையில் எம் மத்தியிலிருந்து பட்டதாரிகள் உருவாவதற்கு வெளிபடுத்த முடியாத அளவான சிரமங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள் என சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்

தொடர்ந்து,
மலையக சமூகம் என்றால் கூலி தொழிலாளர் குழு என்ற அடையாளத்தை உடைத்தெறிந்து எமக்கு கௌரவமான அடையாளத்தைக் கொடுப்பதில் இவர்களில் கல்வி உயர்வே 
வழிசமைக்கிறது.

எமது சமூகத்திலிருந்து உருவாகும் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு என்பது வெறுமனே அந்தஸ்தோடோ அல்லது வறுமானத்தோடோ மாத்திரம் சம்பந்தப்பட்டதல்ல
ஏனைய கற்கும் மாணவர்களுக்கு இது உதாரணமாகவும் உத்வேகம் அளிப்பதாகவும் இருக்கிறது.

பட்டதாரி ஒருவருக்கு அவரது கல்வி தகைமைக்கேற்ற தொழில் வாய்ப்பு கிடைக்காத போது அது குறிப்பிட்ட அவருக்கு மட்டுமல்ல அடுத்து வரும் சந்ததிக்கும் சலிப்பை ஏற்படுத்துகிறது.

வடகிழக்கில் நில உடமை குடும்பத்தில் பட்டதாரி ஒருவர் சுயதொழிலில் ஈடுபடும் போது கிடைக்கும் சமூக கௌரவம் மலையக பட்டதாரி ஒருவர் சுயதொழிலில் ஈடுபடும் போது கிடைப்பதில்லை.

தன் துறைசார்ந்த பட்டப்படிப்பிற்கேற்ற தொழில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கூட ஒரு தொழிலுமே கிடைக்காது என்ற நிலை ஏற்படுமானால் இவர்கள் பெருந்தோட்டத்தில் தொழிலாளர்களாகவே வேலை செய்து விட்டு போகலாம் தானே?

எம் சமூகத்தில் கற்றவர்களுக்கு இலகுவாகக் கிடைக்கும் அரசாங்கத் தொழில் ஆசிரியர் தொழில் மாத்திரமே அதிலும் பயிற்சி ஆசிரியர்களின் நிலை பரிதாபமாகிவிட்டது.
பட்டதாரிகள் பல பல துறைகளில் பயிற்றுவிக்கப் படுகிறார்கள் எமது சமூகத்தை சார்ந்தவர்கள் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் எண்ணிக்கையும் குறைவு மறுபக்கத்தில் மருத்துவர்களாக பொறியியலாளர்களாக சட்டத்தரணிகளாக உருவாகுவதும் குறைவு.

எம்  சமூகம் சார்ந்தவர்கள் பேராசிரியர்களாகவோ சட்டத்தரணிகளாகவோ அல்லது வேறு துறைகளிலோ பிரகாசிக்கும் போது எமது முழு சமூகமுமே பூரிப்டைந்து அவர்களை வாழ்த்துகிறது.

இந்த எண்ணிக்கையை விடவும் ஏனைய  சமூகங்களிலிருந்து அதிகமானோர் பதவி அங்கீகாரம் பெறுவது அவர்கள் மத்தியில் எமது அளவுக்கு பெருமை கொள்ளச் செய்வதில்லை.
இது அவர்களின் சமூகக் கட்டமைப்பு வளங்களில் பூர்த்தி மற்றும் பொருளாதார வசதியோடும் பார்க்கப்படும்.

எமது சமூகப்பட்டதாரிகள் அரச தொழிலை நாடாது சுயதொழிலும் நாட்டம் காட்ட வேண்டுமாயின் அதற்கான நிலமூலதனம் பொருளாதார வசதி,சந்தைப்படுத்தல் வசதி சந்தைப்படுத்தல் அடிப்படை வளங்களான நிலம் பொருளாதரம் சந்தைப்படுத்தல் போன்ற எந்த வசதியுமே எம்மிடம் இல்லாத நிலையில் இது எந்தளவு சாத்தியமாகும்.

அனைத்து பட்டாதரிகளுக்கும் வேலைவாய்ப்பு என்ற வேலைத்திட்டத்தில் ஏதோ காரணத்தால் உள்வாங்கப்படாத பட்டதாரிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்
மலையகத்தின் பல பட்டதாரிகள் இதில் உள்வாங்கப்படவும் இல்லை. பயிற்ச்சிக்காக இணைத்துக்கொள்ளப் பட்டவர்களுக்கும் அவர்களில் கல்வி துறை சார்ந்த தொழில் வழங்கப்படுமா என்பதும் உறுதியாக தெரியவில்லை.

ஆகவே வேலையற்ற மலையகப் பட்டதாரிகள் விடயத்தில் நாம் இன்னும் ஆக்கப்பூர்வமான முன்மொழிவுகளையும் ஆலோசணைகளையும் அரசாங்கத்துக்கு முன்வைக்க வேண்டும்.

எமது சமூக பட்டதாரிகள் அரச துறையில் உள்வாங்கப்படுவதற்கும் ஏனைய சமூகம் சார்நதவர்கள் உள்வாங்கப்படுவதற்கும் பாரிய வித்தியாசங்கள் உள்ளன.
எமது சமூகம் எவ்வளவுக்கெவ்வளவு அரச தொழில் துறையில் உள்வாங்கப்படுகிறதோ அந்தளவுக்குத்தான் எமது எதிர்க்கால  சந்ததியும் கல்வியில் ஆர்வம் காட்டும்.

மறுபக்கத்தில் 200 வருட எமது அவலமான சமூக அடையாளத்தை மாற்றுவதற்கும் இது காரணியாகமாறும்.

ஆகவே பட்டதாரி நியமனங்களில் எமது சமூகம் சார்ந்த பட்டதாரிகளின் நிலை ஒரு விதிவிலக்காக ஆராயப்பட்டு உரிய முறையில் இவர்கள் அனைவரும் தொழில்வாய்ப்பு பெறுவதை நாம் உறுதிசெய்ய வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

No comments: