தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்-அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்


தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கத்திற்குள் இருந்து பெற்றுக்கொடுப்பதற்கான இயலுமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அஞ்சல் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகவியலாளர் தொழில் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று, யாழ்ப்பாணம் அஞ்சல் மா அதிபர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் அஞ்சல் சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின்,அது தொடர்பாக அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்தால் அதற்கான உடனடி தீர்வினை பெற்றுத்தருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

No comments: