பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்


நாட்டில் நிலவும் நிலைமையை கருத்திற் கொண்டு, பரீட்சைக்காக கம்பஹா மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 11 ஆம் திகதி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 12 ஆம் திகதி உயர் தரப்பரீட்சை ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், கம்பஹா மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு சட்டம் அமுல்பட்டுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மாணவர்கள், தமது பரீட்சை அனுமதி அட்டையை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக்கொள்ள முடியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.No comments: