இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றில் சீனா உறுதியாக நிற்கும்-சீனத் தூதுக் குழுவினர்


இலங்கையின் அபிவிருத்திக்கான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் Yang Jiechi தலைமையிலான தூதுக்குழுவினர், இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடிய போதே, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பை தொடர்ந்தும் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் சீன ஜனாதிபதி முன்னுரிமை வழங்குவதாக தூதுக் குழுவினர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச அரங்கங்களில்,  இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றில் சீனா உறுதியாக நிற்பதாகவும் சீனத் தூதுக் குழுவினர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: