நாட்டில் டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரிப்பு


2020ம் ஆண்டின் கடைசி 9 மாதங்களில் 27ஆயிரத்து 798 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 1068 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் டெங்கு நுளம்பு பரவா வண்ணம் சூழலை வைத்திருக்குமாறு தொற்று நோயியல் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

No comments: