மட்டக்களப்பு ஆயித்தியமலை மகிழடித்தீவு பிரதான வீதி வெள்ள நீரினால் உடைப்பு - போக்குவரத்து துண்டிப்பு

கனகராசா சரவணன் 


மட்டக்களப்பில் நேற்று வெள்ளிக்கிழமை (30) இரவு பெய்த கடும் மழையினால்  ஆயித்தியமலை மகிழடித்தீவு பிரதான வீதி மழை வெள்ள நீரினால் உடைந்து அதனூடாக வெள்ள நீர் வழிந்தோடி வருகின்றது. 

இதனால் அந்த வீதியினூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

வருடாந்த பருவபெயர்ச்சி மழை நேற்று வெள்ளிக்கிழமை மாலை  கடும் இடிமின்னலுடன் பெய்தது. இதனையடுத்து வெள்ள நீர் தாழ் நிலப்பகுதியை நோக்கி ஓடத் தொடங்கிய நிலையில் ஆயித்தியமலை மகிழடித்தீவு பிரதேசத்துக்கான பிரதான வீதி வெள்ள நீரினால் உடைந்துள்ளது.

இதனால் இந்த வீதியினூடாக போக்குவரத்து செய்ய முடியாத நிலையினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 


No comments: