விசேட தேவையுடைய மாணவர்களுக்கு சக்கர நாற்காலி வழங்கி வைப்பு

செ.துஜியந்தன்


எம் கடமை உறவுகள் அமைப்பினால் கல்முனையில் வசிக்கும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ஒரு இலட்சத்து எண்பத்து ஐயாயிரம் ரூபா பெறுமதியான  மின்சார தானியங்கி சக்கர நாற்காலி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

எம் உறவுகள் அமைப்பின்  தலைவர் எஸ்.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அவ் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கல்வியை கற்றுவரும் கல்முனையைச் சேர்ந்த இரு மாணவர்களின் கற்றலுக்கு உதவுவகையில் இவ் மின்சார நாற்காலி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதியுதவியினை  யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பைச் சேர்ந்த இராசமணி நவரெட்ணம் நினைவாக கனடாவில் வசிக்கும்  அவரது மகள் வழங்கியிருந்தார். 

No comments: