இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மைத்திரிபால சிறிசேன ஆஜர்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஆஜராகவுள்ளார்.

இரண்டாவது தடவையாக அவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் அவர் கடந்த 5ம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தார்.

No comments: