நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பில் வெளியான செய்தி


நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் வாரத்திற்குள் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுத்து செல்வது தொடர்பாக நாடாளுமன்ற குழுவின் விசேட கலந்துரையாடல் இன்று  இடம்பெற்றது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் கட்சி தலைவர்களுக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments: