நேற்றைய தினம் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட பிரதேசம்


நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 586 பேரில் பெரும்பாலானவர்கள் நீர்கொழும்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரிவில் 58 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,கொட்டாஞ்சேனை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 37 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மட்டக்குளிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 32 தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: