கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி விசேட கலந்துரையாடல்
மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி விசேட கலந்துரையாடலொன்றை நடாத்துகின்றது.
சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கு உடனடியாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்களை மேற்கொள்வதற்காகவே இந்த அவசர கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.
திவுலபிட்டி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த பெண் கொரோனா தொற்றாளர் பணியாற்றிய தனியார் நிறுவனம் விசேட அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.
இதற்கமைய, குறித்த நிறுவனம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னனெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
No comments: