நாட்டில் நேற்றைய தினத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்


நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 207 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டவர்களில் மினுவாங்கொடை தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

அத்துடன், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் வெலிசறைக் கிளை தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒருவரும், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊழியர் ஒருவரும், ஏனைய நபர் ஒருவரும் அவர்களில் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில்  பணியாற்றியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1034 ஆக பதிவாகியுள்ளது.

இதற்கமைய,  நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4459 ஆக காணப்படுகின்றது.

அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3274 ஆக காணப்படுகின்றது.

இதேவேளை, 1172 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


No comments: