நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு


கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள்  மற்றும் அலுவலகங்கள் பின்பற்றவேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அச்சநிலைமை ஏற்பட்டுள்ள நிலையில்  சமூகப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

பொதுமக்கள் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

உலகின் வேறு அனைத்து நாடுகளையும் விட கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை முன்னனின்று செயற்பட்டது.

அதனாலேயே வைரஸ் பரவலை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளது.

எனவே நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு சுகாதார அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

56 சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. குறித்த நடைமுறை பின்பற்றப்படுவது தொடர்பில் கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: