பொகவந்தலாவ கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான இரண்டு பெண்களும் மாத்தற கம்புரபிட்டியவிற்கு அனுப்பி வைப்பு.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


பொகவந்தலாவ கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உருதியான மேலும் இரண்டு பெண்களும் மாத்தரை கம்புருபிட்டிய பகுதிக்கு நேற்று இரவு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோகர்கள் தெரிவித்தனர். 

கொழும்பு பேலியாகொட மீன் சந்தைக்கு சென்று பொகவந்தலாவ பகுதிக்கு மீன் ஏற்றி வந்த லொறியின் சாரதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று இருப்பதாக உருதி செய்யப்பட்டு குறித்த நபரை பொலநறுவைக்கு அனுப்பி வைத்தனர். 

இதேவேளை குடும்பத்தில் உள்ள பத்து பேருக்கும் பி. சி. ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது ஒரு குடும்பத்தை சேர்ந்த மேலும் இரண்டு பெண்களுக்கு தொற்று உறுதியானது. 

நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதியான பெண் ஒருவர் கடந்த 20ம் திகதி பொகவந்தலாவ சிறி தண்டாயுதபாணி ஆலயத்திற்கு பூஜை ஒன்றில் கலந்து கொண்டமையினால் குறித்த ஆலயம் மூடப்பட்டு ஆலயத்தில் உள்ள ஆறு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு கடந்த 20ம் திகதி பூஜை வழிபாட்டில் கலந்து கொண்ட அனைத்து அடியார்களையும் பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு சமுகம் தந்து பரிசோதனைக்கான தமது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


No comments: