சமூக வளர்ச்சிக்கு அடித்தளமே ஆசிரியர்கள் தான் சபை கூட்டத்தில் வேலுயோகராஜ் தெரிவிப்பு.

நீலமேகம் பிரசாந்த்


நுவரெலியா பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் செவ்வாய்கிழமை (06) சபையின் தவிசாளர் வேலு யோகராஜ்  தலைமையில் நடைபெற்றது.இதன்போது முதல் உரையை ஆரம்பித்த வேலுயோகராஜ் இச்சமூக மாற்றமும் வளர்ச்சியும் ஆசிரியர்களின்  கைகளிலேயே தங்கியுள்ளது.கல்லை கூட சிற்பமாக மாற்றும் சிற்பியை போல கல்வியில் மாணவர்களை செதுக்கும் சிற்பமாக தொழிற்படுகின்றனர்.என கூறியதோடு ஆசிரியர்கள் தின வாழ்த்துக்களையும் அதேபோல சிறுவர் தின வாழ்த்துக்களையும் பகிர்ந்துக்கொண்டார்

மேலும் அவர் சில பிரேரணைகளை இன்று சபைக்கு முன்வைத்தார். (Covid 19) கொரோனா வைரஸில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு நுவரெலியா பிரதேச சபையின் மூலம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை செவ்வனே நிறைவேற்றி தருவதாகவும் உறுப்பினர்களுக்கு உறுதி அளித்தார். மேலும் பல முக்கிய பிரேரணைகள் பிரேரிக்கப்பட்டு  சபையில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: