அளுத்கம, பயாகல மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படமாட்டாது


களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம, பயாகல மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குறித்த பொலிஸ் பிரிவுகளில் நாளை காலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அளுத்கம, பயாகல மற்றும் பேருவளை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: