பொது விடுதிகளில் தங்கியிருந்து தொழில் செய்வோருக்கான முக்கிய அறிவிப்பு


பொது விடுதிகளில் தங்கி பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருபவர்கள் இது குறித்து தமது நிறுவனத்தின் பிரதானியிடம் அறிவிக்க வேண்டியது அவசியமென இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியில் இதுவும் ஒன்றென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 45 சதவீதமானோர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டவர்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: