தனியார் வகுப்பறைகள் நாளை முதல் மூடப்படவுள்ளது


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல்  இரண்டாம் தவைணை விடுமுறை  வழங்கப்பட்டுள்ள நிலையில் தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளுக்கும் குறித்த  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கம்பஹா மாவட்டம் உட்பட கொழும்பு மாவட்டத்தில்  மறு அறிவித்தல் வரை  தனியார் வகுப்புக்கள் நடாத்துவதற்கு  தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா  மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகள், பாலர் பாடசாலைகள், மதரசாக்கள் மற்றும் பிரிவெனாக்களும் நாளைமுதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: