சில ரயில் சேவைகள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் நிலைமை காரணமாக சில ரயில் சேவைகள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் இருந்து புறப்படுகின்ற சில ரயில் சேவைகளே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளர் ஏ.டி.ஜி செனவிரத்ன இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

இதற்கமைய, புத்தளம் ரயில் மார்க்கம் ஊடாக, கொழும்பு கோட்டையிலிருந்து காலை 9.35 , பிற்பகல் 2.35 மற்றும் பிற்பகல் 6.15 ஆகிய நேரங்களில் சிலாபம் நோக்கிச் செல்கின்ற ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், புத்தளம் ரயில் மார்க்கம் ஊடாக,  கொழும்பு கோட்டையிலிருந்து பிற்பகல் 4.30, 5.20, 5.40 மற்றும் 6.45 ஆகிய நேரங்களில் பொல்கஹவில நோக்கிப் புறப்படுகின்ற ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், புத்தளம் ரயில் மார்க்கம் ஊடாக, கொழும்பு கோட்டையிலிருந்து பிற்பகல் 5.50 இற்கு ரம்புக்கனை நோக்கிப் பயணிக்கின்ற ரயில் சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கடல் மார்க்கம் ஊடாக, மருதானையிலிருந்து முற்பகல் 11.10 , மற்றும் பிற்பகல் 2.05, 3.20, 4.45, 6.25 மற்றும் 7.45 ஆகிய நேரங்களில், அலுத்கமை நோக்கிப் பயணிக்கின்ற ரயில் சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

அத்துடன், களனிவெலி ரயில் மார்க்கம் ஊடாக, கொழும்பு கோட்டையிலிருந்து, பிற்பகல் 4.25 இற்கு அவிஸ்ஸாவலை நோக்கிப் பயணிக்கின்ற ரயிலும், பிற்பகல் 6.30 இற்கு கொஸ்கம நோக்கிப் பயணிக்கின்ற ரயிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments: