பொகவந்தலாவையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


பொகவந்தலாவ கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். 

பேலியாகொட மீன் சந்தைக்கு சென்று மீன் ஏற்றி வந்த நபர்  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தபட்டமை தொடர்பில் 26.10.2020.அன்று குறித்த குடும்பத்தில் உள்ள பத்து பேருக்கும் பி. சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளபட்டது. 

அதன் அடிப்படையில் குறித்த குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று இன்றைய தினம் உறுதிசெய்யபட்டது.

அந்தவகையில் இவர்களோடு தொடர்பு வைத்திருந்த 32 பேருக்கான பி. சி. ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு மாதிரிகள் நுவரெலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றுக்கு உள்ளான இரண்டு பேரையும் நுவரெலியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


No comments: