பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை


ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியன இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன.

இதன்படி, ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நகர எல்லைகள் வரை மாத்திரமே பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நகரங்களுக்குள் பேருந்துகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: