ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் பலர் கைது


ஊரடங்கு உத்தரவு அமுலாகியுள்ள கம்பஹா மாவட்டத்தின் 18 பிரிவுகளில் உள்ள மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வர்த்தக நிலையங்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக  இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் பிறப்பிக்கபப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறிய 34 வாகனங்களும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: