போபத்தலாவ மெனிக்பாம் பகுதியில் வாழும் மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


போபத்தலாவ மெனிக்பாம் பகுதியில் வசித்து வரும் 24 குடும்பங்களை  போபத்தலாவ 
மெனிக்பாம் முகாமைத்துவம் எம்மை இங்கிருந்து வெளியேற்ற மெனிக்பாம் நிர்வாகம் நீதிமன்ற அனுமதியினை கோர முயற்சித்து வருவதாக போபத்தலாவ மெனிக்பாம் பகுதியில் உள்ள 24 குடும்பங்களை சேர்ந்த மக்கள் குற்றம் சுமத்துவதோடு இது தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் கவனம் செலுத்தி தமக்கான தீர்வினை பெற்றுத் தருமாறு குறித்த மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

நாங்கள் அனைவரும் குறித்த பண்ணையில் 70 வருடகாலமாக சேவையாற்றி வருகிறோம். 2017.03.14ம் திகதி காலப்பகுதியில் முகாமைத்துவத்தோடு ஏற்பட்ட பிரச்சினை ஒன்றின் காரணமாக எம்மீது பொய்யான குற்றங்களை சுமத்தி
நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து 24 பேருடைய தொழிலை இல்லாமல்
செய்துள்ளனர். 

தற்பொழுது தாங்கள் வாழ்ந்து வரும் வீடுகளில் இருந்து எம்மை
வெளியேற்ற இந்த நிர்வாகம் முயற்சித்து வருகிறது. இங்கு 24 குடும்பங்களை
சேர்ந்த 200 பேர் வசித்து வருகின்றோம். எம்மை இவ்வாறு வெளியேற்றினால் தாம் எங்கு செல்வது இந்த மெனிக்பாம் பகுதியில் எமக்கு சொந்தமான ஒரு காணிகூட இல்லை. நாம் தற்பொழுது கூட இந்த மூன்றரை வருடகாலமாக விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகிறோம் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இந்த மாதளவில் தாம் வசிக்கும் வீடுகளில் இருந்து வெளியேறுமாறு நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக நாட்டின் ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கும் கடிதங்களை அனுப்பி வைத்தபோதும் இதுவரையிலும் எமக்கும் எவரும் உதவி கரம் நீட்ட முன்வரவில்லை. தொழிற்ண்ணையில் பரம்பரையாக தொழில்புரிந்து வருகிறோம். 

ம்மை தற்பொழுது வசிக்கும் வீட்டை விட்டு வெளியறுமாறு கூறினால் எமக்கு செல்வதற்கு எந்தவொரு இடமுமில்லை. கல்வி. பொ.சா.தர பரீட்சை எழுத உள்ள மாணவர்கள் இருக்கிறார்கள் அவ்வாறு நாம் வெளியேற்றப்பட்டால் எப்படி எமது பிள்ளைகள் பரீட்சை எழுதமுடியும்.

ஆகவே எமது பிரச்சினை தொடர்பில் நேரில் வருகை தந்து நாட்டின் ஜனாதிபதி அவர்கள் எமக்கான உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு மெனிக்பாம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: