சிறுத்தையின் அச்சத்தில் வாழும் மக்களின் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மக்கள் கோரிக்கை

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


திம்புள்ள பத்தனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கொட்டகலை கிர்ஸ்லஸ்பாம் தோட்டத்தில் சிறுத்தைபுலியின் அச்சம் காரணமாக உரிய அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

குறித்த இரண்டு தினங்களுக்கு முன்பு மக்கள் வாழும் லயன் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை புலி நடமாட்டம் அதிகம் காணப்படுவதாகவும் வீடுகளில் உள்ள வளர்ப்பு நாய்களை கொண்டு செல்வதாகவும் மக்கள் தெரிவித்துள்ளாாடு,குறித்த பகுதியில் சிறுத்தை நடமாடும் காட்சிகள் வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ சீ டிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இது தொடர்பில் நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

இந்த சிறுத்தைகளின் நடமாற்றம் தொடர்ந்து காணப்படுகின்றமையால் தாம் நாளாந்தம் அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். நாம் சிறுகுழந்தைகளை வைத்துள்ளோம். இந்த சிறுத்தைகளின் தொல்லையால் தொழிலுக்கு செல்வதற்கு கூட இடையுறாக இருக்கிறது. இது குறித்து வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: