ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர் எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு  கோட்டை நீதவான்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரச நிதியினை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில்  குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள  நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments: